'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவினர் திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?

திங்கள், 27 நவம்பர் 2017 (18:12 IST)
கார்த்தி நடிப்பில் H.வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் பெரும் வரவேற்புடன் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் 'குற்றப்பரம்பரை' என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட இனத்தை அவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த பிரச்சனையை பெரிதாக்க விரும்பாத தீரன் படக்குழுவினர் இதுகுறித்து ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டதோடு, அந்த அறிக்கையில் வருத்தமும் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத்தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இந்த படத்தில் காட்டப்படவிலலை

இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாக கருதுவதால் அதற்காக 'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்வதோடு வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றிலிருந்து குற்றப்பரம்பரை என்ற சொல் மற்றும் புத்தகக்காட்சி நீக்கப்படும் என தெரிவித்து கொள்கிறோம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்