அமலாபாலுக்கு திருமணம் நடந்தது உண்மையா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (13:42 IST)
நடிகை அமலாபாலுக்கு மறுமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நடிகை அமலாபாலுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தயாரிப்பாளர் பவ்நிந்தர்சிங் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பவ்நிந்தர்சிங்  கைது செய்யப்பட்டார்.
 
 இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை பவ்நிந்தர்சிங் தாக்கல் செய்தபோது தனக்கும் நடிகை அமலாபாலுக்கும் திருமணம் நடந்த ஆதாரத்தை சமர்ப்பித்தார். இதனை அடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பவ்நிந்தர்சிங் அளித்த ஆதாரத்தை நீதிமன்றமே ஏற்று கொண்டு நிபந்தனையற்ற ஜாமீன் நீதிமன்றம் வழங்கியுள்ளதால் அமலாபால் - பவ்நிந்தர்சிங் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்