ரெமோ படத்திற்குப் பின்னர் நடிகர் சிவகார்த்திக்கேயனின் ஆஸ்தான தயாரிப்பாளராக ஆர் டி ராஜா உருவெடுத்தார். தொடர்ந்து வேலைக்காரன், சீமாராஜா, பெயர் அறிவிக்கப்படாத சயின்ஸ்பிக்ஷன் படம் என வரிசையாக இணைந்தனர்.
இதில் வேலைக்காரன் படமும், சீமராஜா படமும் பட்ஜெட்டை விட அதிகமாக செலவானதால் தேவையில்லாத நஷ்டம் உருவானது. இதனால் சீமராஜா ரிலிஸீன் போது ஒரு மிகப்பெரிய தொகைக் கடனாக இருவர் தலையிலும் விழுந்தது. அதனையடுத்து கடனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் படத்தை உடனடியாக இருவரும் ஆரம்பித்தனர். மிதரன் இயக்க இருக்கும் அந்த படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டு வருகின்றன.
ஆனால் சிவகார்த்திக்கேயன் இப்போது பல தயாரிப்பாளர்களிடம் முன் பணம் வாங்கிக்கொண்டு பல படங்களில் நடிக்கும் யோசனையில் இருக்கிறார். இதனால் சிவகார்த்திக்கேயனின் சொந்த நிறுவனம் போல பார்க்கப்பட்ட ஆர் டி ராஜாவின் 24 ஏஎம் நிறுவனத்திற்கு இப்போது பைனான்ஸியர்கள் கடன் கொடுக்க அஞ்சுகிறார்களாம். அதனால் சிவகார்த்துகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் மெகா பட்ஜெட் சயின்ஸ் பிக்க்ஷன் படத்தின் படப்பிடிப்பு இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இந்தப் படத்திற்காகக் காத்திருந்து வேலை செய்த இயக்குனர் ரவிக்குமார் இப்போது செம அப்செட்டில் இருக்கிறாராம்.
இதனால் ஆர் டி ராஜா மற்றும் சிவகார்த்திக்கேயனுக்கு இடையிலான நட்பில் விரிசல் விழுந்துள்ளதாகத் தெரிகிறது. தயாரிப்பாளர் நடிகர் என்பதை தாண்டி இருவரும் அண்ணன் தம்பி போலப் பழகி வந்த நிலையில் இப்போது இருவரும் பேசிக்கொள்வது கூட இல்லையாம். சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை விட அதிகமாக செலவு செய்து கடன்களைத் தன் தலை மேல் கட்டிக்கொண்ட கடுப்பில் இருக்கிறாராம் ஆர் டி ராஜா.