புதிய படத்துக்காக காஷ்மீர் செல்லும் சிபி

வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (15:32 IST)
சிபி நடித்திருக்கும் கட்டப்பாவை காணோம் விரைவில் திரைக்கு வருகிறது. சைத்தான் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி  இயக்கும் படத்தில் சிபி தற்போது நடித்து வருகிறார். நவம்பரில் தொடங்கிய படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை வினோத் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் விஸட் துரையிடம் உதவி  இயக்குனராக இருந்தவர்.
 
ஆக்ஷன் படமாக தயாராகும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் தொடங்குகின்றனர். படத்தின் நாயகி, பிற  நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்