2.0 -வில் அக்ஷய் குமாரின் அர்ப்பணிப்பை பார்த்தீங்களா...! பிரம்மிப்பூட்டும் வீடியோ இதோ
வெள்ளி, 16 நவம்பர் 2018 (18:03 IST)
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் மிகுந்த பெருட்செலவில் உருவாகி வரும் படம் 2.0. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 2.0 படம் வரும் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. 2.0 படத்தின் ஹீரோ, வில்லன் இரண்டுமே அக்ஷய் குமார் தான் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
மேலும் 2.0 படத்திற்காக மேக்கப் போட்டு தயாரானதற்கு தன்னை விட அக்ஷய் குமார் தான் பாவம் ரொம்ப கஷ்டப்பட்டார் என்றார் ரஜினி.
ரஜினி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பது தற்போது நமக்கு புரியவந்துள்ளது. அக்ஷய் குமார் மேக்கப் போட்டு தயாராகும் வீடியோ ஒன்றை லைக்கா நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது .
இந்த வீடியோவை பார்த்தால் அய்யோ பாவம், அக்ஷய் குமார் இவ்வளவு கஷ்டப்பட்டாரா என்று தோன்றுகிறது. இதை பார்த்த அடுத்த நிமிடமே 2.0 நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று நமக்கு தோன்றுகிறது.
பிரமிப்பிப்பூட்டும் அக்சய்குமாரின் இந்த தோற்றத்தை பார்த்துவிட்டு உங்களுக்கு தோன்றுவதை கூறுங்கள்.