பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வசூல் குவித்து வருகிறது.
முதல் நாளில் ரூ.8.3 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.11.22 கோடியும், 3 வது நாளில் ரூ.16 கோடியும் வசூலான இப்படம், இதுவரை ரூ.93.37 கோடி வசூலித்து உள்ளது. இனி வரும் வாரத்தில் இப்படம் ரூ. 100 கோடி வசூல் ஈட்டிவிடும் என்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.