ஹிந்தியில் சாதனை படைத்த விஜய் படம்

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (18:23 IST)
விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம், ஹிந்தியில் சாதனை படைத்துள்ளது.



 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் ‘தெறி’. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தை ஹிந்தியில் டப் செய்து, யூ டியூபில் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி வெளியிட்டனர். அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட இந்தப் படத்தை, இன்றுவரை 26 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். எனவே, ஹிந்தியிலும் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பது தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்