சூப்பர் டீலக்ஸில் 88 டேக்குகளை வாங்கிய பிரபல பாகுபலி நடிகை

Webdunia
சனி, 13 அக்டோபர் 2018 (15:51 IST)
நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘ஆரண்யக் காண்டம்’ படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இவர் தற்போது ‘சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். திருநங்கை கேரக்டரின் பெயர் ஷில்பா. மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
இந்நிலையில் பாகுபலி முதல் மற்றும்  இரண்டாம் பாகங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகையான ரம்யாகிருஷ்னன் இந்த படத்தில் லீலா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
முதலில் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க  நதியாவை அணுகினர் படக்குழுவினர். ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் அந்த கதாபாத்திரத்தில்  தற்போது ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். 
 
படத்தின் முக்கியமான ஒரு காட்சியில் நடிக்க  88 ரீடேக் எடுத்துள்ளார் ரம்யாகிருஷ்ணன். இந்த காட்சிக்காகவே நதியா படத்தில் இருந்து விலகினார் என்றும் சொல்லாம். இரண்டு நாட்களாக நதியாவை வைத்து அந்த காட்சியை படமாக்க முயற்சித்தோம். ரம்யா கிருஷ்ணன் 88வது டேக் எனக்கு திருப்தி அளிக்காவிடில் படத்தை விட்டு வெளியேறுவதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்