ஐஸ்வர்யா நடிப்புக்கு தடை போட்ட தம்பி ராமையா?

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (07:35 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அர்ஜுன். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக வலம் வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடிக்கிறார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியைதான் ஐஸ்வர்யா திருமணம் செய்ய உள்ளார். இவர்களீன் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இந்நிலையில் நடிகையான ஐஸ்வர்யாவி திருமணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளாராம் தம்பி ராமையா. இப்போது அர்ஜுன் இயக்கத்தில் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்