சூர்யா ஜோ‌டியாக நடிக்கும் தமன்னா

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (11:54 IST)
வீரம் படத்துக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்காமலிருந்த தமன்னா விரைவில் சூர்யாவுடன் நடிக்க உள்ளார்.
இந்தி, தெலுங்கில் பிஸியான தமன்னா சில வருடங்கள் தமிழில் நடிக்காமலிருந்தார். வீரம் படத்தில் தமன்னாவை தனக்கு ஜோ‌டியாக்கி மீண்டும் அவரை தமிழில் நடிக்க வைத்தார் அஜீத். தற்போது ராஜமௌலியின் பாகுபலி, ஆகடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில்...?
இதுவரை எந்தப் படமும் கமிட்டாகாதவர் தற்போது சூர்யா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோ‌டியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவலை தமன்னாவே ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
சூர்யா வெங்கட்பிரபுவின் மாஸ் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, எமி ஜாக்சன் அதில் நடிக்கின்றனர். அதையடுத்து அவர் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் நடிப்பார் என பேச்சு உள்ளது. அடுத்த வருடம் ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 யில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார். இதில் எந்தப் படத்தில் தமன்னா சூர்யாவுடன் நடிக்க உள்ளார் என்பது தெரியவில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்