தளபதி விஜய்யின் மெர்சல்; கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

வியாழன், 22 ஜூன் 2017 (10:27 IST)
இன்று வெளியான மெர்சல் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு மாடை அடக்குவது போல அவருடைய புகைப்படம். மெர்சல் திரப்படத்தில் ஆஸ்கர் நாயகான் தமிழன் ஏ.ஆர். ரகுமான் மெர்சல் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

 
தெறி திரைப்படத்தை இயக்கிய அட்லி இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். பாகுபலி படத்திற்கு கதை எழுதிய இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இந்த திரைப்படத்திற்கு திரைக்கதை  எழுதியுள்ளார்.
 
விஜய் முதல் முறையாக 3 வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இதற்கு முன் எந்த திரைப்படத்திலும்  3 வேடங்களில் நடித்ததில்லை. மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு மெர்சல் திரைப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் என  மூன்று நடிகைகள் நடித்துள்ளனர்.

 
விஜய்யின் பெயருக்கு முன்னால் இளைய தளபதி என்ற அடைமொழி மட்டுமே இருக்கும் ஆனால் முதல் முறையாக இந்த  முறை ‘மெர்சல்’ ஃபஸ்ட் லுக்  போஸ்டரில் ‘தளபதி விஜய்’ என அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்