முழு பலத்தை காண்பித்த 'தல'. கடைசி பாலில் சிக்ஸர் அடித்து ஜெயித்த தளபதி

திங்கள், 24 ஏப்ரல் 2017 (05:20 IST)
கோலிவுட் திரையுலகில் இவ்வருடம் வெளிவரவுள்ள படங்களில் அதிக எதிர்பார்ப்புள்ள திரைப்படம் எது என்பது குறித்த சர்வே ஒன்று சமூக வலைத்தளமான டுவிட்டரில் நடத்தப்பட்டது. இதில் அஜித்தின் 'விவேகம்', விஜய்யின் 'தளபதி 61, 'விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' மற்றும் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்கள் இடம்பெற்றன




 
 
முதலில் இருந்தே விவேகம் மற்றும் தளபதி 61 படங்களுக்கு அதிகளவில் வாக்குகள் பதிவாகியது. விக்ரம் மற்றும் சூர்யா படங்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுவிட, தல, தளபதி படங்களுக்கு இடையே கடும் போட்டி நடந்தது.
 
முடிவில் அஜித் ரசிகர்கள் தங்கள் திறமை முழுவதையும் காண்பித்து வெற்றி பெற முயற்சித்த போதிலும் 'தளபதி 61' படம் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் இரண்டு திரைப்படங்களுக்கும் 43% ஓட்டுக்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி சில மணி நேரங்களில் விஜய் ரசிகர்கள் அதிகளவு வாக்குகள் அளித்ததே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்