இதனை தொடர்ந்து பல முன்னணி கதாநயகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழில் வெளியான கத்தி ரீமேகில் கைதி நெ. 150 என்ற பெயரில் தெலுங்கில் எடுத்துள்ளனர். அதில் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய்யின் 61வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
காஜல் தற்போது அஜீத்துடன் தல 57 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தல மற்றும் தளபதி இடையேயான வித்தியாசம் குறித்து அவர் கூறுகையில், அஜீத்தும் சரி, விஜய்யும் சரி பெரிய நடிகர்கள். இருவருமே தலைக்கனம் இல்லாதவர்கள், நட்பை மதிப்பவர்கள். அவர்களுக்கு இடையே வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.