விஜய்யின்’ தி கோட்’ படத்தில் ’தல’ தோனி?

Sinoj
புதன், 27 மார்ச் 2024 (22:06 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். 
 
இப்படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்க, இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
 
இப்படத்தில் ஷூட்டிங் தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. விஜய்,பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
 
சமீபத்தில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.110 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், இப்படத்தில்  கிரிக்கெட் சம்பந்தமான காட்சிகள் வருவதாகவும், இதற்காகத்தான் இலங்கையில் ஒரு ஸ்டேடியத்திற்கு ஷீட்டிங் செல்ல படக்குழு இருந்ததாகவும், தற்போது கேரளாவில் உள்ள பிரபல ஸ்டேடியத்தில் ஷூட்டிங் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
அதேபோல் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், லைகாவுக்காக இயக்கவுள்ள ஒரு படத்திலும் கிரிக்கெட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும், விஜயின் கோட் படத்தில் கிளைமாக்ஸில் தோனி நடிப்பதாக சில நாட்களுக்கு முன்பு பேசப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் காட்சிகள் அப்படத்தில் வருவதால் தோனி இப்படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்