'தானா சேர்ந்த கூட்டம்' அரசியல் படமா? விக்னேஷ் சிவன் விளக்கம்

புதன், 26 ஜூலை 2017 (07:05 IST)
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.  



 
 
இந்த நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை பார்த்து பலர் இதுவொரு அரசியல் படமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்துள்ளார். சூர்யாவுக்காகவே ஸ்பெஷலாக எழுதப்பட்ட கதை தான் இந்த படத்தின் கதை என்றும் இதுவொரு அரசியல் படம் கிடையாது என்றும் கூறினார்.
 
மேலும் கடந்த 1987ஆம் ஆண்டு நடைபெறுவதாக அமைந்துள்ள இந்த கதைக்கு இதுவரை சூர்யாவுடன் இணைந்து நடிக்காத ஒரு ஹீரோயின் தேவைப்பட்டதால் கீர்த்திசுரேஷை நாயகியாக தேர்வு செய்ததாகவும் கூறினார். மேலும் இந்த படத்தில் தனியாக காமெடிக்கு என டிராக் இல்லையென்றும் கதையோடு காமெடியும் இணைந்து வரும் என்றும் கூறிய விக்னேஷ் சிவன், செந்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் தோன்றுவதாக கூறியுள்ளார்.\

வெப்துனியாவைப் படிக்கவும்