இந்திக்கு செல்லும் டெம்பர்...

வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (19:26 IST)
தெலுங்கில் வெளியான பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.

விக்ரமார்க்குடு - ரவுடி ரத்தோர், போக்கிரி - வான்டட், மரியாத ராமண்ணா - சன் ஆஃப் சர்தார்... இந்த வரிசையில் இடம்பிடிக்கயிருக்கிறது டெம்பர் திரைப்படம்.
 

 
ஜுனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான படம், டெம்பர். தொடர்ந்து சுமார் படங்கள் தந்து கொண்டிருந்த ஜுனியர் என்டிஆருக்கு டெம்பர் சுமார் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. பூரி ஜெகன்நாத் படத்தை இயக்கியிருந்தார்.
 
ஜுனியர் என்டிஆர் ஊழல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை சச்சின் ஜோஷி வாங்கியுள்ளார். ஜுனியர் என்டிஆர் நடித்த வேடத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்