தெலுங்கு பிச்சைக்காரன் - 50 நாள்கள், 200 திரையரங்குகள்

திங்கள், 4 ஜூலை 2016 (17:52 IST)
தமிழில் வெற்றி பெற்ற பிச்சைக்காரனின் தெலுங்கு பதிப்பு ஆந்திரா, தெலுங்கானாவில் பட்டையை கிளப்புகிறது.


 
 
போட்ட பணத்தைவிட பல மடங்கை இந்தப் படம் திருப்பியெடுத்திருக்கிறது.
 
பிச்சகாடு என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட இந்தப் படம் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகி 200 திரையரங்குகளில் 50 தினங்களை கடந்துள்ளது. தெலுங்கில் டப் செய்யப்பட்ட படங்களில் இன்று இதுவே டாப்பில் உள்ளது. சுமார் 20 கோடிகளை இப்படம் சூலித்துள்ளது. இனியும் வசூலிக்கும் என்கிறார்கள்.
 
விநியோகஸ்தர்களுக்கு கிடைத்திருக்கும் ஷேரைப் பார்க்கையில் பாகுபலியை சில இடங்களில் பிச்சகாடு முந்தியுள்ளது. 
 
பிச்சைக்காரன் பெயரில் ஒரு கோடீஸ்வரன்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்