தொடர்ந்து படுதோல்வி அடையும் தெலுங்கு சினிமாக்கள்… இதுதான் காரணமா?

திங்கள், 25 ஜூலை 2022 (14:21 IST)
தெலுங்கு சினிமாவில் டிக்கெட் விலைக்கான கட்டணங்களை உயர்த்திய பின்னர் அடுத்தடுத்து வந்த படங்கள் தோல்வி அடைந்துள்ளன.

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் புறநகர் பகுதியில் உள்ள திரையரங்குகளுக்கு டிக்கெட் விற்பனை பலமடங்கு அதிகமாக்கப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சம்பளம் ஆகியவற்றை குறைக்க சொல்லியும், டிக்கெட் விலையைக் குறைக்கவும் கோரி ஆகஸ்ட் 1 ஆம் தேதி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விலையேற்றத்துக்குப் பிறகு வெளியான பல படங்கள் சரியான வசூலை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான நாக சைதன்யாவின் தேங்க்யூ திரைப்படம் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்