தெலுங்கு படவுலகு ஆவலுடன் எதிர்பார்க்கும் துருவா

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (18:06 IST)
ராம் சரண் தேஜா நடித்துவரும் துருவா படத்தை தெலுங்கு திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. அப்படியென்ன துருவாவில் ஸ்பெஷல்?


 
 
தமிழில் வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் தழுவல்தான் துருவா. ராம் சரண் தேஜா நடித்துவரும் இந்தப் படத்தில் அரவிந்த்சாமியே மீண்டும் வில்லனாகியிருக்கிறார். படத்துக்கு துருவா என்று பெயர் வைத்துள்ளனர்.
 
தனி ஒருவன் படத்தின் கதையும், அரவிந்த்சாமியின் வில்லன் நடிப்பும், தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
 
செப்டம்பர் 2 பாடல்களை வெளியிட்டு அக்டோபர் 7 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்