பரஞ்சேதியில் வில்லியாக நடிக்கம் தேஜாஸ்ரீ

வெள்ளி, 27 மார்ச் 2015 (16:54 IST)
சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்று அர்ஜுனுடன் கெட்ட ஆட்டம் போட்ட தேஜாஸ்ரீயை யாரும் மறந்திருக்க முடியாது. சொல்லி அடிப்பேன் படத்தில் விவேக்குக்கு ஜோடியாக நாயகியாக நடித்தார். ஆனால், படம்தான் இன்றுவரை வெளியாகவில்லை.
 

 
நாயகி கனவுடன் வந்தவரை கோடம்பாக்கம் கவர்ச்சி நடிகையாக்கியது. இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் வில்லியாக திரும்பி வந்துள்ளார்.
 
பாலாஜி இயக்கும் பரஞ்சோதி படத்தில் இவர்தான் வில்லி. இந்தப் படத்துக்காக 15 கிலோ எடைபோட்டு கதாபாத்திரமாகவே மாறிவிட்டாராம். 
 
எப்படி மாறினாலும் தேஜாஸ்ரீ கவர்ச்சி பாத்திரமாக இருப்பதுதான் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்