தொழில்நுட்பக் கலைஞர்களையும் மாற்றிய பா.இரஞ்சித்

வியாழன், 25 மே 2017 (10:59 IST)
ரஜினி நடிப்பில் தான் இயக்கும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களையும் மாற்றியுள்ளார் பா.இரஞ்சித்.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘காலா’. தன்னுடைய முந்தைய படங்களின் சாயல் எதுவும் இருக்கக் கூடாது  என்பதில் தெளிவாக இருக்கிறார் பா.இரஞ்சித். எனவே, முந்தைய படங்களில் நடித்த நடிகர்களை இந்தப் படத்தில் பயன்படுத்தவில்லை. அதேசமயம், சில தொழில்நுட்பக் கலைஞர்களையும் மாற்றியுள்ளார்.
 
எடிட்டர் பிரவீன் கே.எல்.லுக்கு வேறு கமிட்மெண்ட் இருப்பதால், படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டார். இதனால்,  அவருக்குப் பதிலாக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்ற இருக்கிறார். மேலும், ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணிபுரிந்த அன்பறிவுக்குப் பதிலாக, ‘அட்டகத்தி’யில் பணியாற்றிய திலீப் சுப்பராயன் பணியாற்ற இருக்கிறார்.
 
மேலும், முந்தைய படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணிபுரிந்த சதீஷுக்குப் பதிலாக, இந்தப் படத்தில் சாண்டியை ஒப்பந்தம்  செய்துள்ளார். அதேசமயம், ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர்களாக  கபிலன், உமாதேவி, ஆடை வடிவமைப்பாளராக அனுவர்தன், மேக்கப் கலைஞராக பானு, புகைப்படக் கலைஞராக ஆர்.எஸ்.ராஜா என தன்னுடைய முந்தைய படங்களில் பணியாற்றியவர்களையும் இந்தப் படத்தில் பயன்படுத்துகிறார் பா.இரஞ்சித்.

வெப்துனியாவைப் படிக்கவும்