கில் பில் 3 ஆம் பாகம் வருமா? டாரண்டினோ அளித்த விளக்கம்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (18:07 IST)
இயக்குனர் க்யிண்டன் டாரண்ட்டினோ இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் பற்றி அவர் பேசியுள்ளார்.

இயக்குனர் குயிண்டன் டாரண்டினோவின் படமாக்கல் பாணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இதுவரை அவர் 9 படங்கள் இயக்கியுள்ள நிலையில் கிட்டத்தட்ட பெரும்பாலான படங்கள் உலகம் முழுவதும் வெற்றி பெற்றவை.

இதையடுத்து அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘என்னுடைய அடுத்த படம் என்ன என்பது பற்றி இப்போது தெரியவில்லை. அது கில் பில் 3 ஆம் பாகமாகக் கூட இருக்கலாம். வெஸ்டர்ன் கதை ஒன்றைப் பற்றியும் நான் யோசித்து வருகிறேன். ஆனால் அது என் அடுத்த படமாக இருக்குமா என்று சொல்ல முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்