'கடைக்குட்டி சிங்கத்தை முந்திய 'தமிழ்ப்படம் 2' வசூல்

திங்கள், 16 ஜூலை 2018 (08:55 IST)
கடந்த வாரம் கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் சிவாவின் 'தமிழ்ப்படம் 2' ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. கார்த்தி, பாண்டிராஜ், டி.இமான், சூர்யா ஆகிய பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்ததால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதேபோல் படம் ரிலீசான பின்னரும் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.
 
அதேபோல் கடந்த வாரம் வெளியான இன்னொரு படம் 'தமிழ்ப்படம் 2'. சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் சென்னை முதல் வசூல் 'கபாலி' மற்றும் தெறி படங்களின் வசூலை அடுத்து மூன்றாவது இடத்தை பெற்றது.
 
இந்த நிலையில் கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் 'தமிழ்ப்படம் 2 ஆகிய இரண்டு படங்களும் நல்ல வசூலை பெற்று வந்தாலும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் வசூலை விட 'தமிழ்ப்படம் 2' வசூல் அதிகமாக இருப்பதாக விநியோகிஸ்தர்களிடம் இருந்து வந்துள்ள செய்திகள் கூறுகின்றன
 
குறிப்பாக சென்னையில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் ஓப்பனிங் வசூல் சுமார் ரூ.1.50 கோடி என்றும், 'தமிழ்ப்படம் 2' படத்தின் ஓப்பனிங் வசூல் சுமார் ரூ.2 கோடி என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்