இந்த மாதம் 13 மற்றும் 17 ஆம் தேதிகளில் அமெரிக்காவில் தமிழ் மெகா ஸ்டார் கொண்டாட்டம் என்ற பெயரில் கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் நெப்போலியன்தான் சிறப்பு அழைப்பாளர். கலை நிகழ்ச்சியை அரங்கேற்றயிருப்பவர்கள் ரோபோ சங்கர் போன்ற தொலைக்காட்சி பிரபலங்கள். அதில் நமிதாவும் நடனமாடுகிறார்.