தெலுங்கு சினிமாவுக்கு படையெடுக்கும் தமிழ் ஹீரோக்கள்!

புதன், 22 டிசம்பர் 2021 (19:05 IST)
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி  உள்ளிட்ட நடிகரக்ளுக்கு தெலுங்கு சினிமாவில்  நல்ல மார்க்கெட் உள்ளது.

அதேபோல் பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ், ராம்சரண், உள்ளிட்ட  நடிகர்களின் படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, சில    நாட்களுக்கு முன் வெளியான புஷ்பா படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வசூல் குவித்தது.

இதனால் தமிழ் நடிகர்களும்   நேரடி தெலுங்குப் படங்களிலும் அங்குள்ள இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் விருப்பம் தெரித்துள்ளனர்.

அந்தவகையில் இயக்குனர் வம்சியின் ஒரு படத்தின் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் நடிகர் தனுஷ் ஒரு புதிய    நேரடி படத்தில் நடிக்கவுள்ளார்

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் படம் வெற்றி பெற்றது.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள இந்திப் படமான அந்தராங் ரெ  படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் சாரா அலிகான் மற்றும் அக்ஷ்ய்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள தமிழ் மற்றும்   நேரடி தெலுங்குப் படம் குறித்த அப்டேட்-ஐ தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் டைட்டில் லுக் நாளை காலை 9-36 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார்.  நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

தமிழ் ஹீரோக்கள் மற்ற மொழி சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டுவதற்கு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

My next Tamil film and my first direct telugu film .. title announcement tom

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்