தமிழுக்கு வரும், அடி கப்பியாரே கூட்டமணி

வியாழன், 29 டிசம்பர் 2016 (14:58 IST)
சென்ற வருடம் வெளியாகி வெற்றி பெற்ற மலையாளப் படம், அடி கப்பியாரே கூட்டமணி. அடி என்றால் அடிப்பது, கப்பியார்  என்றால் கிறிஸ்தவ கோவில்களில் பாதிரியாருக்கு உதவியாளராக இருக்கும் உபதேசியார், கூட்டமணி என்றால் கோவில் மணியை தொடர்ச்சியாக அடிப்பது. ஏதாவது அசம்பாவிதம் இல்லை அவசரம் என்றால் இப்படி அடிப்பார்கள்.

 
நிற்க. இந்த மலையாளப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள்.
 
நகைச்சுவையை நம்பி வெளியான இந்தப் படத்தை தமிழில் வைபவை வைத்து ரீமேக் செய்வது என்று முடிவு செய்துள்ளனர்.  இதில் பிரதானமாக ஒரு பெண் கதாபாத்திரம் வரும். மலையாளத்தில் நமிதா பிரமோத் நடித்திருந்தார். தமிழில் நல்ல  நடிகையாக தேடி வருகிறார்கள்.
 
த்ரிஷ்யம் (பாபநாசம்), ஹவ் ஓல்ட் ஆர் யூ? (36 வயதினிலே) படங்கள் தவிர சமீபத்தில் மலையாளத்திலிருந்து ரீமேக்  செய்யப்பட்ட எந்தப் படமும் ஓடவில்லை. அடி கப்பயாரே கூட்டமணி எந்தவகையாக இருக்கப் போகிறதோ?
 

வெப்துனியாவைப் படிக்கவும்