தமன்னா இதுவரை சொந்தக் குரலில் பேசியதில்லை. தமன்னா மட்டுமில்லை, நயன்தாரா, சமந்தா போன்றவர்களே சமீபத்தில்தான் சொந்தக்குரலில் பேசினர்.
நானும் ரவுடிதான் படத்துக்கு முன்புவரை நயன்தாராவுக்கு டப்பிங் குரல்தான். நானும் ரவுடிதான் படம்தான் அவர் சொந்தக்குரலில் பேசிய முதல் படம். சமந்தா, நீதானே என் பொன் வசந்தம், 10 எண்றதுக்குள்ள என்று சில படங்கள். தமன்னாவும் இவர்களுடன் இணைகிறார்.