தபுவுக்கு இப்போது என்ன வயது? அவர் அறிமுகமான படத்தை வைத்து, விரல்களை நீட்டி மடக்கி கணக்கிடாமல் அவரே பளிச்சென்று சொல்கிறார், நாற்பத்தைந்து.
தபு பிறக்கும் போதே அப்பா அவரது அம்மாவை விட்டு பிரிந்தார். திருமண உறவின் மீது தபுக்கு அப்போதே கசப்பு விழுந்தது. இளம் பருவத்தில் அவர் காதலித்த தெலுங்கு நடிகரும் (வேற யார், நாகார்ஜுனாதான்) அவரை கைவிட திருமணமே வேண்டாம் என்று இவ்வளவு வருடங்களை ஓட்டிவிட்டார்.
இந்நிலையில் அவர் மும்பை தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் வதந்தி உலவுகிறது. பேச்சிலர்களின் பிரச்சனை ஆரம்பமாவது 40 வயதுக்கு மேல்தான். 45 வயதிலாவது தபுவின் கெட்டிமேளச் சத்தம் கேட்டால் நல்லதுதானே.