தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு நடித்த டாணா படத்தின் பெயர் காக்கி சட்டை என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பெயருக்கு அனுமதியளித்த கமலுக்கும், சத்யா மூவிஸுக்கும் சிவ கார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
டாணா என்பதன் பொருள் பலருக்கும் தெரியாது என்பதால் படத்தின் பெயரை காக்கி சட்டை என்று மாற்றுவது என முடிவு செய்தனர். சத்யா மூவிஸின் தயாரிப்பில் கமல் நடிப்பில் ஏற்கனவே காக்கி சட்டை பெயரில் படம் வெளியாகியிருப்பதால் முறைப்படி அவர்களிடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும். கமலும், சத்யா மூவிஸும் காக்கி சட்டை பெயரை பயன்படுத்த ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து டாணா காக்கி சட்டை என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சிவ கார்த்திகேயன், எனது அடுத்தப் படத்தின் பெயர் காக்கி சட்டை. தலைப்பிற்கு அனுமதி அளித்த கமல் சாருக்கும், சத்யா மூவிஸுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.