சிம்ரன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் செய்தி

புதன், 28 அக்டோபர் 2015 (16:46 IST)
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் சிம்ரனைப் பார்த்த சிம்ரன் கொலவெறி ரசிகர்கள் அப்படியே கலங்கிப் போனார்கள். சிக்கென்ற சிம்ரனை காலம் கொஞ்சம் பல்க்காக்கியிருந்தது. சிம்ரனின் அழகிலும் பாழாய்ப்போன வயது சேதாரம் விளைவித்திருந்தது.


 
 
த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் பார்த்து அப்செட்டான சிம்ரன் ரசிகர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி. சிம்ரனின் முதல் படத்தயாரிப்பு விரைவில் தொடங்குகிறது. அதில் சிம்ரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
நடிக்க வாய்ப்பு குறைந்தபோதே, படங்கள் தயாரிக்கப் போகிறேன் என்று அறிவித்தார் சிம்ரன். ஆற அமர யோசித்து இப்போதுதான் தனது ஆத்துக்காரருடன் அதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை கௌரி சங்கர் என்ற விளம்பரப்பட இயக்குனர் இயக்குகிறார். சிம்ரனுக்கு முக்கிய வேடம் என்பது மட்டும் முடிவாகியிருக்கிறது.
 
படம் குறித்த அதிகப்படி தகவல்களை சிம்ரனே விரைவில் வெளியிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்