சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த்

வெள்ளி, 11 நவம்பர் 2016 (11:41 IST)
மாவீரன் கிட்டு படத்தை தொடங்கியதும் தெரியாமல் முடித்ததும் தெரியாமல் வெளியீட்டுக்கு கொண்டு வந்துவிட்டார், சுசீந்திரன். படம் வெளியாகும் முன்பே தனது அடுத்தப் படத்தை தொடங்கியுள்ளார்.



இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் யாருடா மகேஷ் சந்தீப் கிஷன், விக்ராந்த் இருவரும் நடிக்கின்றனர். முதல்முறையாக இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் சுசீந்திரன் இயக்குகிறார்.

சந்தீப் கிஷனுக்கு தெலுங்கில் சின்ன மார்க்கெட் உள்ளது. அதன் காரணமாகவே தெலுங்கிலும் ஒரேநேரத்தில் படத்தை எடுக்கின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்