இமானுடன் ஏழாவது முறையாகக் கூட்டணி! அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்!

செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:15 IST)
இசையமைப்பாளர் இமானின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருடனான அடுத்த படத்தை அறிவித்துள்ளார் இயக்குனர் சுசீந்தரன்.

தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர்களில் இமானும் ஒருவர். தனது 18 ஆவது வயதில் தமிழன் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் சினிமா வாழ்வின் உச்சமாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்துக்கு இசையமைத்தார்.

இந்நிலையில் நேற்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் இயக்குனர் சுசீந்தரன் வெளியிட்ட வீடியோவில் இமானுடன் 7 ஆவது முறையாக இணைய உள்ளதை அறிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே 1 ஆம் தேதி தொடங்கும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்