மாமனார் வீட்டிற்கு விசிட் அடித்த சூர்யா...ஜோதிகா வீட்டில் இத்தனை பேரா..!

புதன், 13 நவம்பர் 2019 (16:46 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா - ஜோதிகா தம்பதி காதலர்களின் சிறந்த ஜோடியாகவும் பார்க்கப்படுகின்றனர். உயிரிலே கலந்தது , மாயாவி , பேரழகன் , பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க , சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்து ரசிகர்ளின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்டனர். 
பின்னர் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களுக்கு தியா , தேவ் என்ற மகள் , மகன் இருக்கின்றனர்.  திருமணம் குழந்தைக்கு பிறகு சினிமாவிற்கு சில வருடங்கள் இடைவெளி விட்டிருந்த ஜோதிகா தற்போது மீண்டும் மகளிர் மட்டும் , 36 வயதினிலே , காற்றின் மொழி , ஜாக்பாட் , ராட்சசி உள்ளிட்ட நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

 
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா தன்னுடைய மனைவியான ஜோதிகாவின் குடும்பத்தை சந்தித்து விடுமுறையை கொண்டாடி உள்ளார் என்ற தகவல் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளது. ஜோதிகாவின் வீட்டில் அப்பா , அம்மா , அக்கா , மாமா அவர்களது குழந்தைகள் என பெரிய பட்டாளமே இருக்கிறது. அவர்கள் அனைவருடனும் ஜோதிகா சூர்யா இருக்கும் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி பரவி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்