சிங்கில் டீ ரூ. 1000 ...பிரமிப்பில் ஆழ்த்திய கடைக்காரர் ! அலைமீதும் கூட்டம்

செவ்வாய், 2 மார்ச் 2021 (23:01 IST)
மேற்குவங்க மாநிலத்தில் ஒருவர் டீ கடை வைத்துள்ளார். அவருடம் ஒரு டீ ரூ.1000க்கு விற்கப்படுகிறது. இது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அடுத்துள்ள முகில்பூரில் வசித்து வருபவர் பிரீதம் கங்குலி.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்ஜாஷ் டீ ஸ்டால் என்ற கடையைத் திறந்தபோது, மக்கள் அவ்வளவாக வருகை தரவில்லை. எனவே மாற்றி யோசித்த அவர், விதவிதமான டீக்களை விற்பனை செய்ய முயன்றார். எனவே அவரிடம் சில்வர் நீடில் டீ, டீ லாவண்டர் டீ,இஞ்சி டீ, துளவி டீ, திசானே டீ, டீஸ்டா வாலி டீ, மாகாய்பாரி டீ உள்ளிட்ட 115 வகைகளில் டீ கிடைக்கிறது.

இதில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவப்பு சில்வர் ஊசி வெள்ளைத்தேயிலை ஒரு கிலோ. ரூ. 2.8 லட்சத்திற்கு விற்கப்படுவதால், எனவே இந்த டீ அவரது கடையில் ரூ.1000க்கு விற்கப்படுகிறது.  இதற்கு வாடிக்கையாளர்களும் உள்ளனர் என பிரீதம் தெரிவித்துள்ளார்.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்