உறுப்புதானம் செய்த நடிகர் சூர்யா

திங்கள், 24 நவம்பர் 2014 (09:31 IST)
பொதுநலப் பணிகளில் ஆர்வமாக ஈடுபடுகிறவர் நடிகர் சூர்யா. சமீபத்தில, உடல் உறுப்புதானத்தை மையப்படுத்தி நடத்தப்பட்ட மாரத்தானில் சூர்யா கலந்து கொண்டார்.
 
உடல் உறுப்பு தானத்தை பிரதானமாக பேசிய சென்னையில் ஒரு நாள் படத்தின் இறுதியில் சூர்யா திரையில் தோன்றி உடல் உறுப்புதானத்தின் முக்கியத்துவத்தை பேசுவார். அது வெறும் பேச்சல்ல. 
 
ஆம், சூர்யா தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளார். உறுப்புதான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட மாரத்தானில் இதனை சூர்யா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்