41 கோடிகளுக்கு விலைபோன சூர்யாவின் எஸ் 3

திங்கள், 18 ஜூலை 2016 (11:08 IST)
சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமான எஸ் 3 படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமை 41 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது.


 
 
ஸ்டுடியோ கிரீன் தயாரித்துவரும் இந்தப் படத்தை ஹரி இயக்கி வருகிறார். அனுஷ்கா, ஸ்ருதி என நாயகிகள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை.
 
இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயா என்டர்டெய்ன்மெண்ட் 41 கோடிகளுக்கு வாங்கியுள்ளது. இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் படம் திரைக்கு வரவுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்