மனம் ரீமேக்கில் நடிக்க மறுத்த சூர்யா குடும்பம்

வியாழன், 26 மே 2016 (11:33 IST)
24 படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் தெலுங்கில் இயக்கிய படம், மனம். நாகார்ஜுன், அவரது தந்தை, அவரது மகன் என மூன்று தலைமுறை நடிகர்கள் அதில் நடித்திருந்தனர்.


 


படம் தெலுங்கில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க தங்களை அணுகியதாக சூர்யா கூறினார். மனம் படத்தின் ரீமேக்கில் நான் என்னுடைய தந்தை சிவகுமார், தம்பி கார்த்தி இணைந்து நடிக்க சந்தர்ப்பம் வந்தது. ஆனால், இன்னொரு மொழிப் படத்தின் ரீமேக் என்பதால் அதில் நடிக்கவில்லை. நாங்கள் மூன்று பேரும் இணைந்து நடிக்கும் படம் சிறப்பாக இருக்க வேண்டும். கதை கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
 
மனம் ரீமேக்கை மறுத்துவிட்டு சூர்யா நடித்த படம்தான் 24 என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்