மாஸை ஒதுக்கி வைத்து ஹைக்கூவில் நடிக்கும் சூர்யா

வியாழன், 26 பிப்ரவரி 2015 (13:08 IST)
நயன்தாரா, ப்ரணித்தாவுடன் வெங்கட்பிரபுவின் மாஸ் படத்தில் நடித்து வந்த சூர்யா நேற்று முதல் பாண்டிராஜின் ஹைக்கூ படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் ஹைக்கூவை தயரிக்கிறது. இரு சிறுவர்களைப் பற்றிய படம் இது. சூர்யாவும், அமலா பாலும் கௌரவ வேடத்தில் தோன்றுகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
 
சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றுமுதல் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. ஹைக்கூவுக்காக மாஸ் படத்துக்கு லீவ் விட்டிருக்கிறார் சூர்யா.

வெப்துனியாவைப் படிக்கவும்