சூர்யா படத்தில் நடிக்கலை - ஹன்சிகா

வியாழன், 6 அக்டோபர் 2016 (10:53 IST)
எஸ் 3 படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரிக்கிறது.


 
 
இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் இப்படத்திற்காக தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சூர்யா. அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்துக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
 
இப்படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கக் கேட்டு என்னை யாரும் அணுகவில்லை என அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்