அறுவை சிகிச்சை வெற்றி - நலமாக இருக்கிறார் அஜித்

சனி, 14 நவம்பர் 2015 (11:09 IST)
ஆரம்பம் படத்தில் அஜித்துக்கு காலில் அடிபட்டதும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை கேட்காமல் அஜித் தொடர்ந்து நடித்து வந்ததும் அனைவரும் அறிந்ததே.


 
 
வேதாளம் படப்பிடிப்பின் போது, முதலில் அடிபட்ட இடத்திலேயே அவருக்கு மீண்டும் அடிபட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த மாதம் 24 -ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக இருந்தார்.
 
நேற்று முன்தினம் அவருக்கு திடீரென வலி அதிகமாக, உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒன்றரை மணிநேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
 
தற்போது அஜித் மருத்துவமனையில் உள்ளார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்