பிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியா, நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டார். பின்னர் டாக்டர்களின் அறிவுரையின்படி கப்பிங் தெரபி என்ற சிறிய வகை ஆபரேசனையும் செய்து கொண்டார்
இந்த நிலையில் கோலிவுட்டில் மட்டுமின்றி மலையாள திரையுலகில் இருந்தும், தெலுங்கு திரையுலகில் இருந்து ஓவியாவுக்கு வாய்ப்பு குவிகின்றதாம். ஆனால் இப்போது சினிமாவில் நடிப்பது முக்கியமில்லை என்றும், ஓவியா பூரண குணம் அடைய வேண்டும் என்றும் அவரது தந்தை கறாராக கூறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது