சூப்பர் ஹிட் படம் இந்தியில் ரிமேக் ...நடிகை இவர் தான் !
வெள்ளி, 5 மார்ச் 2021 (23:44 IST)
2017 ஆம் ஆண்டு வெளியான படம் அருவி. இப்படம் இந்தியில் ரீமேக்காக உருவாகவுள்ளது
கடந்த 2017 ஆம் ஆண்டு அதிதி பாலன் நடிப்பில் வெளியான படம் அருவி. இப்படத்தில் நடித்தவர் நடிகை அதிதி பாலன். அவரது நடிப்பு பேசப்பட்டது.
இப்படத்தை இயக்கியவர் அருண்பிரபு. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று நல்ல விமர்சனத்தைப் பெற்றது.
இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.இதில் நடிகை பாத்திமா நடிக்கவுள்ளார். இப்படத்தை நிவாஸ் இயக்கவுள்ளார்.