கன்னட படத்தில் மணிரத்னம்....ரகசியத்தை உடைத்த சுஹாசினி

ஞாயிறு, 4 மார்ச் 2018 (16:32 IST)
மணிரத்னம் பி.ஆர்.ரவிந்திரன் இயக்கிய கன்னட படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதை சுஹாசினி கூறியுள்ளார்.

 
இந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் ஒருவர் மணிரத்னம். வசனம் மற்றும் அதை உச்சரிக்கும் விதம், காட்சி போன்றவைகள் அவர் படத்திற்கு தனி சிறப்புகள் உண்டு. ஹீரோக்களுக்காக படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் இயக்குநருக்கான படம் பார்த்த ரசிகர்கள் இருந்தது மணிரதனத்துக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மணிரத்னம் படத்து முடித்த பின் நேரடியாக படம் எடுக்க வந்துவிட்டார் என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவரும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த ரகசியத்தை சுஹாசினி நேற்று சென்னையில் நடைபெற்ற அபியும் அனுவும் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
மணிரத்னம் படித்து முடித்த பின் பி.ஆர்.ரவிந்திரன் கன்னடத்தில் விஷ்ணுவர்தவை வைத்து கன்னடத்தில் இயக்கிய படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். அதன் பிறகுதான் மணிரத்னம் தனித்து படம் இயக்க தொடங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்