ரஜினியை சந்தித்த கேஜிஎஃப் பட நிறுவனம்.. கூட சென்ற இயக்குனர் சுதா கொங்கரா!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (14:07 IST)
ரஜினி நடிக்கும்  ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். அடுத்த படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இது ரஜினி நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்க மாஸ்டர் மற்றும் லியோ படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொலல்ப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவுக்கு ஓய்வெடுக்க சென்ற ரஜினிகாந்தை கே ஜி எஃப் புகழ் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்களாம். இந்த சந்திப்பில் இயக்குனர் சுதா கொங்கராவும் கூட இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பு சுதா கொங்கராவுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்