ஏதென்ஸ் நாட்டின் விமான நிலையத்தில் சிலை – யார் தெரியுமா அந்த நடிகை!

வியாழன், 10 டிசம்பர் 2020 (17:25 IST)
நடிகை தீபிகா படுகோனுக்கு ஏதென்ஸ் நாட்டின் விமான நிலையத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் விமான சேவையை நிறுத்தினர். அதன் பின்னர் இப்போது தளர்வுகளோடு ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ஏதென்ஸ் நாட்டு விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக உலக மக்களின் உண்மையான புன்னகை என்ற கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

அதையடுத்து உலக பிரபலங்களின் சிலைகளை அவர்கள் அங்கு வைத்துள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த நடிகை தீபிகா படுகோனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் பங்களித்து வரும் தீபிகா படுகோன், தற்போது ஹாலிவுட்டிலும் சில படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்