இந்த மாதம் தொடங்குகிறது... ரஹ்மான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கும் படம்

திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (17:14 IST)
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சார கனவு படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் புதிய படமொன்றை இயக்குகிறார். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் இந்த மாதம் தொடங்குகிறது.


 
 
ரஹ்மானின் சகோதரியின் மகனும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
 
சாய் பல்லவி நாயகியாகும் இந்தப் படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறுகின்றன. கம்போசிங் மற்றும் பாடல் ஒலிப்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்