ஜெயம் ரவியுடன் நடிக்கும் அக்ஷரா கௌடா

வெள்ளி, 18 மார்ச் 2016 (12:04 IST)
நடிகை அக்ஷரா கௌடா ஜெயம் ரவியின் போகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


 
 
ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மண் மீண்டடும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடியை வைத்து இயக்கும் படம், போகன். அரவிந்த்சாமி இதில் இன்னொரு ஹீரோவாக வருகிறார். ஜெயம் ரவியும், அரவிந்த்சாமியும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
 
இவர்களுடன் அக்ஷரா கௌடாவும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளுடன் ஜெயம் ரவியுடன் இணைந்து ஒரு குத்துப் பாடலுக்கு ஆடவும் செய்கிறார். ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கான நடனத்தை அமைக்கிறார்.
 
தற்போது முழுவீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 
ஜெயம் ரவி, அக்ஷரா கௌடா, போகன் படம், அரவிந்த்சாமி, 

வெப்துனியாவைப் படிக்கவும்