நடிகைகளின் இடுப்பைக் காட்டத்தான் சேலை : பெண் இயக்குனர் கருத்து

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (16:58 IST)
இயக்குனர் சுராஜை போல பல இயக்குனர்கள் நடிகைகளை கவர்ச்சி பொருளாகவே பார்க்கிறார்கள் என பெண் திரைப்பட இயக்குனர் ஸ்ருதி ஹரி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் பேட்டியளித்த கத்திச்சண்டை பட இயக்குனர் சுராஜ், நடிகை என்றால் கவர்ச்சிதான். அதற்காகத்தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். நடிகைகள் அதற்காகத்தான் சம்பளம் பெறுகிறார்கள் என்கிற ரீதியில் சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியது. அவரின் கருத்திற்கு நடிகை நயன்தாரா, தமன்னா உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சுராஜ் மன்னிப்புக் கேட்டதோடு, அவர் கூறியதை வாபஸ் பெற்றுக்கொண்டார். 
 
இந்நிலையில், திரைப்பட இயக்குனர் ஸ்ருதி ஹரி என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “இயக்குனர் சுராஜ் மட்டுமல்ல.. ஒரு பெண் உதவி இயக்குனராக நான் பணி புரிந்த போது கூட, படத்தின் கதாநாயகிகளை, அதிகப்படியான கவர்ச்சியாக காட்டததற்கு நான் திட்டு வாங்கியுள்ளேன். 


 

 
ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாட வந்த நடிகை, ஆபாசமான உடையை கண்டு அழுதார். இந்த பெண் ஏன் சினிமாவில் நடிக்க வந்தார்? என அப்படத்தி பெண் ஆடை அலங்கார நிபுணரே என்னிடம் கேட்டார்.
 
அதேபோல், ஒரு கதாநாயகிக்கு அவரின் இடுப்பு தெரியும் படி சேலை அணிவிக்கப்பட்டது. கிளாப் அடிக்கும் நபர், நடிகையின் இடிப்பிற்கு நேராக இல்லாமல், அவரின் முகத்திற்கு நேராக போர்டை பிடித்ததற்காக இயக்குனரிடம் திட்டு வாங்கினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்