சுசீந்திரனின் ஜீவாவில் ஹீரோயின், தனுஷ் தயாரிப்பில் மீண்டும் சிவ கார்த்திகேயன் ஜோடியாக காக்கி சட்டை, விக்ரம் பிரபு ஜோடியாக வெள்ளைக்கார துரை, ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில் என்று ஸ்ரீதிவ்யாவின் கால்ஷீட் டைரி பொங்கி வழிகிறது.
இந்த நேரத்தில் அவர் முதலில் ஒப்பந்தமான படங்களின் - காட்டு மல்லி, நகர்ப்புறம் - தயாரிப்பாளர்கள் அவரை நெருக்குகிறார்கள். காட்டு மல்லியில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் பாக்கி உள்ளன. அடுத்து அஜீத்தா, விஜய்யா என்று கனவு காண்பவரிடம் காட்டு மல்லிக்கு என்ன மதிப்பிருக்கும்?