பிரிவை விரும்பும் சவுந்தர்யா, சேர்ந்து வாழ விரும்பும் அவரது கணவர் அஸ்வின்

புதன், 21 செப்டம்பர் 2016 (10:37 IST)
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா நான்கு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த அஸ்வினை பிரிந்து வாழ்கிறார். கணவனும், மனைவியும் பிரிந்து ஓராண்டாகிவிட்டது.

 
இந்நிலையில் சௌந்தர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் தான் விவாகரத்து செய்யப்போவதை உறுதிப்படுத்தியிருந்தார். தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து வரும் செய்திகள் உண்மையே. கடந்த ஒரு வடத்திற்கு மேலாக நாங்கள் தனியாகத் தான் வாழ்ந்து வருகிறோம். விவாகரத்து தொடர்பான பேச்சுக்கள் நடந்து வருகின்றன. என்னுடைய குடும்பத்தின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளியுங்கள் என சௌந்தர்யா தனது டுவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்நிலையில் இருவரும் விவாகரத்து கோர உள்ளதாக கூறப்படுகிறது. விவாகரத்து எல்லாம் வேண்டாம் ஒன்றாக சேர்ந்து வாழுங்கள் என்று பலரும் சவுந்தர்யா மற்றும் அஸ்வினுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்களாம். ரஜினி கூட மகள் மற்றும் மருமகனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினாராம். அஸ்வின் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ தயாராக உள்ளதாகவும், சவுந்தர்யா பிரிவதில் தீர்மானமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்